ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (14:26 IST)

நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை: நிதிஷ் குமாரை கிண்டல் செய்த பாஜக பிரமுகர்

பிரதமர் பதவி மீதி தனக்கு ஆசை இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறிய நிலையில் பிரதமர் பதவி நாட்டில் காலியாக இல்லை என பாஜக பிரமுகர் கிண்டல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்குவங்க முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜாஸ் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர அகிலேஷ் யாதவ் நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.
 
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் ’எனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்றும் எதிர் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது முக்கிய ஆசை என்றும் தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்த பாஜக முகூர்த்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் என்பவர் நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை என்பது நிதிஷ்குமாருக்கு தெரிந்து தான் அந்த பதவிக்கு ஆசைப்படவில்லை என்று கூறியுள்ளார் என்றும் கூறியுள்ளார் மேலும் எங்கள் உதவியால்தான் அவர் பீகார் முதல்வரானார் என்றும் நிதிஷ் பீகாரில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva