வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (17:44 IST)

சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் நாட்டில் உள்ள 148 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனின் அருள் பெற்றனர்.
 
சிங்கப்பூர் நாட்டுக்கு அந்த காலத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அங்குள்ள வாட்டர்லூ தெருவில் 1870ம் ஆண்டு கிருஷ்ணன் கோயிலை கட்டினர். இந்த கோவிலில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ளவர்களும் வழிபட்டு வந்தனர்.
 
கடந்த 2014ம் ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து புணமரைக்க பராமரிப்பு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலின் கோயில் கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிர தடுகளால் ரூ.40 லட்சம் சிங்கப்பூர் டாலர் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
 
இந்நிலையில் 148 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்படட்து. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அந்நாட்டு தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது