திருப்பதி கோவிலில் ஊழல்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு
திருப்பதி கோவில் செயல் அலுவலர் மற்ற ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு ஊழல் செய்வதாக பிரபல நடிகையும், நகரி தொகுதியின் எம்.எல்.ஏவுமான ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்
இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடிகை ரோஜா சென்றார். ஆனால் அவருக்கு கோவில் நிர்வாகம் முக்கிய பிரமுகர்களுகான டிக்கெட்டை வழங்க மறுத்துவிட்டது. இதனால் ரோஜா, பாதயாத்திரை மேற்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, 'முக்கிய பிரமுகர்களுகான டிக்கெட் எனக்கு வழங்கப்படவில்லை. ஆனாலும் பாதயாத்திரையாக வந்து டிக்கெட்டை பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தற்போதைய செயல் அலுவலர் வட இந்தியர், அதனால் அவருக்கு இந்த கோவிலின் நிலைமை தெரியாது. இதை சாதகமாக்கி கொண்டு கோவிலின் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, அறங்காவலர் குழுவை அமைக்காமல் அதிகாரிகள் துணையுடன் ஊழல் செய்து வருகிறார்' என்று குற்றஞ்சாட்டினார்.