வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (15:04 IST)

ரூ.6400 கோடி ஊழல் பணம் அரசிடம் ஒப்படைப்பு: ஒரு ஆச்சரிய தகவல்

ஊழல் மூலம் சேர்த்த ரூ.6400 கோடி பணத்தை அரசிடம் திருப்பி செலுத்தியுள்ளார் ஒருவர். இப்படி ஒரு நிகழ்வு தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ நடக்க வாய்ப்பே இல்லை என்பது உங்கள் மைண்ட்வாய்ஸ் சொல்வது உண்மைதான். இப்படி ஒரு சம்பவம் நடந்தது சவுதி அரேபியாவில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் சவுதி அரேபியாவின் இளவரசராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பேற்ற முகமது பின் சல்மான், பல அதிரடி நடவடிக்கைகளையும் நிர்வாக சீர்த்திருத்தங்களையும் ஏற்படுத்தினார்.
 
இவருடைய நடவடிக்கைகளின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக ஊழல் செய்து பணம் சேர்த்த சுமார் 200 இளவரசர்கள், அமைச்சர்கல், தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் ஊழலில் சேர்த்த பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் மன்னிப்பு வழங்கப்படும் என்று இளவரசர் அறிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மிதப் என்ற இளவரசர் தான் சேர்த்த ரூ.6400 கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்துக்களை அரசிடம் ஒப்படைத்தார். இதன் பின்னர் இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
இப்படி ஒரு நிகழ்ச்சி தமிழகத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்