வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (15:40 IST)

அரிவாளுடன் வீதியில் சென்ற ரவுடிகள்… அதிரவைக்கும் வீடியோ

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் அருண். இவர் மீது கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வழுதாவூர் என்ற பகுதியில்  தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, இன்னொரு கோஷ்டினருக்கும் , இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருண் தனது நண்பர்களுடன் சென்று இன்னொரு தரப்பினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளர்.

இதனால் கைகலப்பாகி அருண் தனது நண்பர்களுடன் இன்னொரு  தரப்பைச் சேர்ந்த சந்துரு மற்றும் முரளியை சரமாறியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , குற்றச்சம்பவத்தை செய்து தப்பிய அருண் மற்றும்  அவரது நண்பர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.