புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:11 IST)

நதிநீர் இணைப்பு திட்டம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை ஆலோசனை

நதிநீர் இணைப்பு நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 நாளை நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்த ஆலோசனையில் தமிழகம் உள்பட 5 தென் மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் 
டெல்லியில் நடைபெற உள்ள இந்த நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக நீர்வளத் துறை நடத்தும் ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது