செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:20 IST)

துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும்: மனம் நொந்த மக்களின் கோரிக்கை

அமெரிக்காவில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சுடு சம்பவத்தால் அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு கிளப்பில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் பலியானார்கள்.

மேலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு அன்று, சிகாகோ நகரின் பூங்கா ஒன்றிற்கு காரில் வந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை சுட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகினர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் கடைகளுக்கு ஏற்கனவே துப்பாக்கி விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், தற்போது பொது மக்கள், வால்மார்ட் நிறுவனம் துப்பாக்கி விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இன்னும் அந்த நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.