1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (17:36 IST)

திருப்பதியில் படிக்கெட் வழியாக செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.


 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் தினமும் வருகின்றனர். அதில் பலர் கட்டணம் மூலமாகவும், இலவச தரிசன வரிசை வழியாக சென்றும் ஏழுமலையான தரிசிக்கின்றனர். அதேபோல், மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ள படிக்கெட் வழியாகவும், பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் பெறுகின்றனர். அவ்வாறு மலைப்பாதை வழியாக செல்பவகளுக்கு இலவச தரிசனம் அளிக்கப்படுகிறது. 
 
எனவே, தினமும் ஏராளமான பக்தர்கள் அந்த மலைப்பாதை வழியாக நடந்து வருகின்றனர். எனவே, தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை மலைப்பாதை நடந்து வருபவர்களுக்கு, அதுவும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட இருக்கிறது. அதற்கு மேல் வருபவர்கள் மற்றும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் மலைப்பாதை வழியாக வருபவர்கள், இலவச தரிசனத்தில் சென்று தரிசனம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு திருப்பதி கோவிலுக்கு வருபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.