ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:23 IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

repo
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் என்படு தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும் நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
ரெப்போ வங்கி வட்டி விகிதம் எந்தவித மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும் எனவும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருவதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
 
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்  ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 6.5 என உயர்ந்துள்ளது.
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரிக்கும். இந்த நிலையில்  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இம்மாதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva