வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (17:21 IST)

அரசியல்வாதிகளால் ரூ. 40 கோடி இழந்தேன் – நடிகை கங்கனா ரணாவத்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜொஅடியாக தாம் தூம் என்ர படத்தில்  நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2021 ஆம் ஆண்டு  ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான தலைவி என்ற படத்தில், ஜெயலலிதாவாக நடித்தார்.

அவ்வப்போது, அரசியல், சமூகக் கருத்துகள் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனா ரணாவத்திற்கு எதிராகச் சமீபத்தில் மகாராஷ்டிர அரசு  நடவடிக்கை எடுத்ததுடன் அவரது அலுவலகம் விதிமுறையை மீறிக் கட்டியதாகக் கூறி அதை  இடித்தனர்.

இந்த நிலையில்,  கங்கனா ரணாவத் அண்மையில் அளித்துள்ள பேட்டியில்,  அரசியல், சினிமா, சமூகப் பிரச்சினைகள் பற்றி நான் உடனே கண்டனம் தெரிவிக்கிறேன். இதனால், அரசியல் தலைவர்கள் என்னை  விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல்  செய்துவிட்டனர்.

மேலும், அரசியல் தலைவர்களை விமர்சித்ததாலும், நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததாலும்  30 விளம்பரங்களில் ஒப்பந்தமாகியிருந்த என்னை  நீக்கிவிட்டனர். இதனால், ஒரு ஆண்டில் ரூ. 30  கோடி முதல் ரூ.40 கோடி வருவாயை இழந்தேன். இப்போது நான் சுதந்திரமாக உள்ளேன். என் கருத்தை யாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.