ரிலையன்ஸில் ரூ.30,158 கோடி இழப்பு ! பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி !

ambhani
sinojkiyan| Last Updated: சனி, 16 நவம்பர் 2019 (18:48 IST)
இந்திய வணிகச் சக்கரவர்த்தியாக இருந்தவர் திருபாய் அம்பானி. அவர் ஸ்தாபித்த ரிலையன்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று உலக அளவில் பிரசித்து பெற்று திகழ்கிறது. திருபாய் அம்பானியின் இறப்புக்குப் பின்,  அவரது இரு மகன்களும் ரிலையன்ஸ் சொத்துகளை பங்கு பிரித்துக்கொண்டனர்.
அதில், அண்ணன் முகேஷ் அம்பானி இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகவும், தொழிலதிபராகவும் உள்ளார். 
 
ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் இயக்குநர் அனில்  அம்பானி ( (முகேஷின் தம்பி ) நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால், அவர்  ரூ. 400 கோடி கடன் தொகையை உடனே செலுத்த வேண்டுமெனவும் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
அப்போது அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பிக்கு பணம் கொடுத்து காப்பாற்றினார்.
 
இந்நிலையில், இன்று ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்  பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
 
மேலும், அவருடன் சாயா விரானிம் ரைனா கரானி, மஞ்சரி காக்கர் , சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
ambhanis
அதாவது, 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்திற்கு ரூ. 3666 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த 2 வது காலாண்டில் ரூ.30158 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனையடுத்து நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களும் பதவி விலகி உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :