ஆஃபருக்கு என்ன ஓட்ட ... ஜியோ நெட்வொர்க்கிலேயே இருந்துறலாமா?

Sugapriya Prakash| Last Modified வியாழன், 24 அக்டோபர் 2019 (14:49 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்கலுக்கு இரண்டு புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 
ஜியோ சமீபத்தில் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மேற்கொண்டால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. அதன் பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு முன்னர் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு இந்த கட்டணம் நடைமுறைக்கு வாரது, மீதமுள்ளவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது. 
 
இந்நிலையில் தற்போது இந்த கட்டணத்தையும் சேர்த்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சலுகைகளில் ஏற்கனவே வழங்கிய பலன்களுடன் கூடுதலாக ஆஃப்நெட் ஐயுசி நிமிடங்கள் கட்டண சேவையும் வழங்கப்படுகின்றன. 
ரூ.555 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 3000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.444 ரீசார்ஜ் திட்டம்: 
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ரூ.333 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.222 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :