வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (14:51 IST)

இலவசமா? மோசமா? ஏமாற்று யுக்திகளுடன் அம்பானி!!

ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என தகவல் வெளியாகியுள்ளது.
 
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஜியோ ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. ஜியோ ஃபைபர் சேவையுடன் அதற்கான கட்டண விவரங்களையும் அம்மாதமே அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ. 
 
அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் வழங்காமல் சோதனை காலமாக குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு ஜியோ ஃபைபார் வந்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்கு தொடரும் என தெரிகிறது. 
ஆம், தற்சமயம் ஜியோ தனது ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதற்கான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பணிகள் முடிந்தாலும் அதனை தொடர்ந்து விற்பனை மற்றும் விளம்பர பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 
 
இவை அனைத்தும் முசிந்த பின்னரே ஹோம் பிராட்பேண்ட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும். எனவே தற்போதைக்கு ஜிகா ஃபைபர் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. 
 
அதேபோல் சோதனை காலத்தில் ஜிகா ஃபைபரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இதனை இலவசமாக பயன்படுத்துகிறார்களா? அல்லது மொத்தமாக இதற்கு பணம் செல்லுத்த வேண்டுமா என்பது குறித்து சரியான புரிதல் இல்லையென தெரிகிறது.