அம்பானியின் கபட ஆட்டம்!! திருத்தம் எனும் பெயரில் தில்லாலங்கடி...

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 
 
ஜியோ நிறுவனம் மற்ற நெட்வொர்க் நம்பருக்கு பேச 6 பைசா கட்டணத்தை வசூலித்து வருகிறது. இதற்காக ஆல் - இன் - ஆல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்போது ஏற்கனவே இருந்த திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 
 
ஆம், ஜியோவின் ரூ.147 திட்டத்தில் ஜியோ அல்லாத நெட்வொர்க்களுக்கு 300 நிமிடங்கள் அளவிலான அழைப்பு நன்மை சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்ஸ் சேவை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,  28 நாட்களாக இருந்த இந்த வேலிடிட்டி 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
மேலும் மற்ற ரீசார்ஜ்களிலும் கால் கட்டணத்திற்கு ஏற்ப விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜியோவின் கால் கட்டண அறிவிப்புக்கு பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆல் - இன் - ஆல் ரீசார்ஜ் திட்டத்தின் தொகுப்பு இதோ... 
 
ரூ.555 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 3000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  
 
ரூ.444 ரீசார்ஜ் திட்டம்: 
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ரூ.333 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  
 
ரூ.222 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :