செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:11 IST)

காதலை ஏற்க மறுத்த மாணவியின் நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞன்!

உத்தரபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் தன் காதலை ஏற்க மறுத்த மாணவியின் நண்பனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல்(23). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மோனிகா (20) என்ற கல்லூரி மாணவியைக் காதலித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை மாலை மாணவி மோனிகா தன் நண்பர்களுடன் இந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த ராகுல், அவரிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

இதை ஏற்க மறுத்த மாணவி, அங்கிருந்து தன் நண்பர்களுடன் செல்ல முயன்றார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில்,ஆத்திரமடைந்த ராகுல், தன்னிடம் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாணவியின் நண்பர் ஷங்கரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து, ராகுலை தேடி வருகின்றனர்.