1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (12:11 IST)

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை.. மத்திய அரசுக்கு பரிந்துரை..!

Train
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டண சலுகை வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மூத்த குடி மக்களுக்கு கட்டண சலுகை அமல்படுத்த கோரி நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் காலத்திற்கு முன்பு வரை மூத்த குடி மக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை கட்டணம் வழங்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு அந்த சலுகைகளை ரயில்வே நிறுத்தி வைத்திருந்த நிலையில் அதனை திரும்ப அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலை குழு ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
இந்த நிலையில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை அமல்படுத்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு வலியுறுத்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran