கணிக்கப்பட்டதை விட விலைவாசி அதிகமாக இருக்கும்! – ஆர்பிஐ ஆளுநர் தகவல்!
இந்தியாவில் எரிபொருள் உள்ளிட்ட பலவும் விலை உயர்ந்துள்ளதால் கணிக்கப்பட்டதை விட விலைவாசி அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சுங்க கட்டணம் உள்ளிட்டவையும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் விலை உயர்வு குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகந்த தாஸ், கடந்த பிப்ரவரியில் கணக்கிடப்பட்டதை விட தற்போது விலைவாசி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். சராசரியிலிருந்து 5.7 சதவீதம் ஆக விலைவாசி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.