வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:07 IST)

உலகிலேயே இந்தியாவில் தான் கேஸ் சிலிண்டர் விலை அதிகமா?

GAs Cylinder
உலகிலேயே இந்தியாவில்தான் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதை அடுத்து சென்னையில் தற்போது 965 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் குளோபல் எனர்ஜி பிரைஸ் என்ற நிறுவனம் அளித்த தகவலின்படி உலகிலேயே இந்தியாவில்தான் அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் பெட்ரோல் விலையில் இந்தியா 3-வது இடத்திலும் டீசல் விலையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளதாக அதே அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.