செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:11 IST)

பிரபல தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை: வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியுமா?

சமீபத்தில் மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது இதேபோல் பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் வங்கிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி
 

இந்த வங்கியின் பணபரிவர்த்தனை செயல்பாடுகளுக்கு தடை விதித்த இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கி புதிதாக கடன் கொடுக்கவும், அதேபோல் டெபாசிட்டுகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தினமும் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.