1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (14:59 IST)

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் – அபராதமாக 3309 கோடி வசூல் !

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 3309 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் ரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித வைப்புத்தொகையும் வைத்திருக்கத் தேவையில்லை. இதுதவிர மற்ற வங்கிக் கணக்குகளில் வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டும். அதை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக  அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக 2016-17 முதல் 2018-19 வரையிலான 3 ஆண்டுகளில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

தனியார் வங்கிகள்
  • 2016-2017 ஆம் ஆண்டு -ரூ.790.22 கோடி
  • 2017-2018 ஆம் ஆண்டு - ரூ.3,368.42 கோடி
  • 2018-2019 ஆம் ஆண்டு - ரூ.1,996.46 கோடி
பொதுத்துறை வங்கிகள்
  • 2016-2017 ஆம் ஆண்டு - ரூ.1,115.44 கோடி
  • 2017-2018 ஆம் ஆண்டு - ரூ.1,138.42 கோடி
  • 2018-2019 ஆம் ஆண்டு - ரூ.1,996.46 கோடி