புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:12 IST)

தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கொலை! – பீகாரிம் அரங்கேறிய கொடூரம்!

உத்தர பிரதேச பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பரபரப்பிலிருந்தே மக்கள் மீளாத சூழலில் பீகாரில் நடந்துள்ள வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கோப்புப் படம்

நாளுக்கு நாள் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் அளித்துள்ளது. சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பஸ்தரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பீகாரில் பக்சர் என்ற பகுதியில் திருமணமான பெண் ஒருவர் 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 5 வயது மகனுடன் சென்ற பெண்ணை பிடித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் கொண்ட கும்பல், அந்த சிறுவனை வாய்க்காலில் வீசி கொலை செய்துள்ளனர். அந்த பெண்ணையும் வாய்க்காலில் வீசி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தொடர்பாக வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்துள்ள போலீஸார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.