செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (08:07 IST)

இன்று வானில் அரிய நிகழ்வு: செவ்வாய், வெள்ளி கோள்களை பார்க்கலாம்!

இன்று வானில் அரிய நிகழ்வு: செவ்வாய், வெள்ளி கோள்களை பார்க்கலாம்!
இன்று வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை பார்க்க காத்திருக்கின்றனர்
 
அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அவர்கள் இன்று செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் பூமியை மிக நெருங்கி வரும் என்று கூறியுள்ளார். வானில் தோன்றும் இந்த அரிய நிகழ்வுகளை இன்றும் நாளையும் வெறும் கண்களால் கூட பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
சூரியன் மறைந்த பின் சரியாக 45 நிமிடங்களுக்கு பிறகு செவ்வாய், வெள்ளி ஆகிய இரு கோள்கள் வெறும் கண்களால் பார்க்கும் வகையில் தெரியும் என்றும் பொதுமக்கள் அவற்றை கண்டு ரசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இன்று வானில் மிக அரிதாக நிகழும் இந்த நிகழ்வை பொதுமக்கள் அனைவரும் பார்க்கலாம் என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் இதனை ஆய்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து பொதுமக்கள் இன்று மாலை இந்த அரிய நிகழ்வை பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.