ப்ளாப் கொடுத்த இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்த பிரபுதேவா!

Last Modified புதன், 2 ஜூன் 2021 (15:21 IST)

குலேபகாவலி என்ற தோல்விப் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது 'குலேபகாவலி' திரைப்படம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், பொங்கல் விடுமுறை படம் என்பதாலும் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் மொத்தமும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் தனக்கு அப்படிப்பட்ட ஒரு பிளாப் கொடுத்த இயக்குனருக்கே மீண்டும் தேதிகள் கொடுத்து ஒரு படத்தை இயக்க சொல்லியுள்ளாராம் பிரபுதேவா.இதில் மேலும் படிக்கவும் :