1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:48 IST)

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது யார்? வெங்கையா நாயுடு அறிவிப்பு

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது யார்? வெங்கையா நாயுடு அறிவிப்பு
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்ததை அடுத்து சமீபத்தில் இந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்டிரிய ஜனதாதள எம்பி மனோஜ் ஷா என்பவர் போட்டியிட்டார். 
 
இவரை எதிர்த்து  ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஸ் என்பவர் போட்டியிட்ட நிலையில் சற்றுமுன் மாநிலங்களவை துணைத் தலைவரை தேர்வு செய்ய குரல் ஓட்டெடுப்பு மூலம் தேர்தல் நடந்தது.
 
இதில் தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு பெற்றதாகவும், இதனையடுத்து மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் வெற்றி பெற்றதாகவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.