துணை பிரதமர் பதவி தறோம்..! இல்ல சபாநாயகர்தான் வேணும்! – அடம்பிடிக்கும் நிதிஸ், சந்திரபாபு! குழப்பத்தில் பாஜக?
இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் கூட்டணியில் தொடர தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளால் பாஜக சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Nithis Kumar, PM Modi, Chandrababu Naidu
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 400+ தனிப்பெரும்பான்மையை எதிர்பார்த்த பாஜகவுக்கு மொத்த கூட்டணியுமே 292 தொகுதிகள் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆதரவு கட்சிகள் சில காங்கிரஸ் பக்கம் திரும்பினால் கூட ஆட்சியமைக்கும் வாய்ப்பு காங்கிரஸ்க்கு சென்றுவிடும்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பீகார் முதல்வர் நிதிஸ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது, அவர்களை கூட்டணியை விட்டு செல்லாமல் பிடித்து வைக்க பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனால் இரு கட்சிகளுமே தங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து டீல் பேசி வருவதாக தெரிகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென நிதிஸ்குமார், சந்திரபாபு நாயுடு இருவருமே கேட்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் பதவி என்பதால் பாஜக அதை கொடுப்பதை குறித்து தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளதாம். அதற்கு பதிலாக தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கு துணை பிரதமர் பதவி அளிப்பதாக பாஜக டீல் பேசி வருகிறதாம்.
இன்று நடைபெற உள்ள பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கியஸ்தர்கள் கூட்டணி கட்சி தலைவர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஸ் குமாருடன் தனியே பேச உள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K