திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:22 IST)

கர்நாடகாவில் ரஜினி, கமல் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்; வாட்டாள் நாகராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தற்பொழுது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்றும் முழக்கமிட்டபடி, தமிழக அரசின் உருவ பொம்மையை தீவைத்து எரித்து, வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் தங்களது கண்டனங்களை பதிவிட்டனர்.