ஆந்திரா, தெலுங்கானாவில் பருவ மழை துவக்கம்:வானிலை ஆய்வு மையம்

Last Updated: சனி, 15 ஜூன் 2019 (12:01 IST)
இன்னும் சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பருவ மழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 12 ஆம் தேதியே பருவ மழை துவங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரும் 16-ஆம் தேதிக்கு பிறகு பருவமழை துவங்கும் என அறிவித்துள்ளது.

வாயு புயல் ஈரப்பதத்தை இழுத்துச்சென்று விட்டதால், மழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

கடலோர ஆந்திரா பகுதிகளில் இன்று பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :