தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! சூப்பர்ஹீரோ போல வந்த ரயில்வே ஊழியர்! – திகைக்க செய்யும் வீடியோ!

Train
Prasanth Karthick| Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:00 IST)
மகராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில்வே நிலையத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தபோது குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. உடனே என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண் திகைத்து நின்ற நிலையில் தண்டவாளத்தில் ரயிலும் கிட்ட நெருங்கிவிட்டது.

இந்நிலையில் தண்டவாளத்தில் வேகமாக ஓடிவந்த ரயில்நிலைய பணியாளர் மயுர் ஷெல்கே மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையை மேலே தூக்கி விட்டதுடன், ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை மத்திய ரயில்வே ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :