ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:22 IST)

அதிகரித்து வரும் கொரோனா; தேர்தல் பிரச்சாரம் ரத்து! – ராகுல்காந்தி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இருந்ததை விட வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக அரசியல், சினிமா பிரபலங்களும் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 8 கட்டங்களாக மேற்கு வங்க தேர்தல் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை கொரோனா காரணமாக ரத்து செய்துள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.