1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (18:36 IST)

ஸ்டெர்லைட் விவகாரம் ; அரசு ஆதரவு பயங்கராவதம் : ராகுல் காந்தி கண்டனம்

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

 
இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியானது மிருகத்தனமான அரச பயங்கரவாதத்திற்கு பெரிய உதாரணம். இந்த மக்கள் அநியாயத்திற்கு எதிராக போராடியவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.