1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. One more case against rahul gandhi

சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

rahul gandhi
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகைகள் பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறு பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல் காந்தி லண்டன் சென்றிருந்தபோது அங்கு சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சாவர்க்கர் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா: என்ன காரணம்?