தொடர்புடைய செய்திகள்
- ஸ்புட்னிக் தடுப்பூசியையும் நாங்களே தயாரிக்கிறோம்! – சீரம் நிறுவனம் விண்ணப்பம்!
- கொரோனாவால் இறந்தால் 5 ஆண்டுகளுக்கு சம்பளம், படிப்பு செலவு! – ரிலையன்ஸ் அறிவிப்பு!
- பிரதமர் வீட்டுல முடியாட்டி என் வீட்டுலேயே போராட்டம் நடத்துறேன்! –டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர் தர்ணா!
- தாய்மார்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதியுங்கள்! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
- தடுப்பூசியை கொஞ்சமா போட்டா தட்டுப்பாடு வராது! – டெல்லிக்கு அறிவுரை சொன்ன ஹரியானா முதல்வர்!
தனிப்பட்ட நபரின் காதல் விருப்பங்கள் மதிப்பு மிக்கவை! – ராகுல்காந்தி LGBTQ+ ஆதரவு பதிவு!
பால்புதுமையினருக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக ஜூன் மாதம் அவர்களுக்கான மாதமாக கொண்டாடப்படும் நிலையில் ராகுல்காந்தி அவர்களை ஆதரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
ஆண் – பெண் இடையேயான காதலை தவிர மற்ற ஓரின காதல்கள், பாலியல் மாற்றங்கள் உள்ளவர்களை குறிக்கும் LGBTQ+ என்ற பிரயோகம் தற்போது உலகம் முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இப்படியான பால்புதுமையர் தங்களுக்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கைகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் LGBTQ+ சமூகத்தினரை அங்கீகரிக்கும் வகையில் Pride Month ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “அமைதியான தனிநபர் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்பது காதல்தான்” என கூரியுள்ளதுடன், LGBTQ+ குறித்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
