ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (12:23 IST)

12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முடிவெடுப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி அளித்திருந்த நிலையில் சற்று முன்னர் அவர் நாளை மறுநாள் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் குஜராத் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்த முடிவை இன்னும் இரண்டு நாட்களில் எடுக்க இருப்பதாக முதல்வருடன் ஆலோசனை செய்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது நாளை மறுநாள் பிளஸ் டூ தேர்வு நடத்துவதா? இல்லையா என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசின் முடிவை எதிர்பார்த்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.