‘எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக கருதுகிறேன்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக கருதுகிறேன் என அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் சென்றுள்ள நிலையில் நேற்று தொழிலதிபர்களின் மத்தியில் பேசினார். அப்போது எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன் என்றும் ஒரு தேசத்திற்கான தனி நபர்களுக்கான தனி உரிமை குறித்த கொள்கைகளை மத்திய அரசு நிறுவ வேண்டும் என்றும் கூறினார்
ஒரு நாட்டின் அரசு உங்களுடைய போனை ஒட்டு கேட்க விரும்பினால் யாரும் உங்களை தடுக்க முடியாது, இது என்னுடைய எண்ணம், ஒரு நாடு உங்கள் போனை ஒட்டு கேட்க விரும்பும்போது அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை என்றும் அவர் கூறினார்.
நான் என்னென்ன வேலைகள் செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார். தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக இந்தியாவில் கூறாமல் அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran