ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (17:08 IST)

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் சேர்ந்தேன் – ராம்குமார் பதில்!

நடிகரும் மூத்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனுமான ராம்குமார் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து  பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்ற முடிவில் இருக்கும் பாஜக சினிமா நடிகர்களையும் பிரமுகர்களையும் தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது.

அந்த வகையில் இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் சென்னை தி நகர் பாஜக அலுவலகத்துக்கு வந்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர் ‘நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், நான் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைந்துள்ளேன்.’ எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் ராம்குமாரின் தம்பி பிரபு ‘நானோ என் மகனோ எந்தக் கட்சியிலும் இல்லை’ என்று கூறியுள்ளார்.