வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (16:14 IST)

இரட்டை குழந்தை பிறந்ததில் இருந்து அடுக்கடுக்கான கஷ்டத்தை அனுபவிக்கும் நயன் - விக்கி!

குழந்தை பொறந்ததில் இருந்தே பிரச்சனை - மறுமணம் செய்யப்போகும் நயன்தாரா? 
 
நயன்தாரா விக்னேஷ் ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 
 
அதன் பின்னர் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்றார். இங்கு தான் அவர்களுக்கு பிரச்சனை பிள்ளையார் சுழி போட்டது. 
 
வாடகை தாய் மூலம் இந்தியாவில் குழந்தை பெற்றது பிரச்சனையாகி வழக்கு வரை சென்றது. அதன் பிறகு நயன்தாரா பெருதும் நம்பிய கனெக்ட் திரைப்பாகிடம் பெரும் தோல்வி அடைந்தது
 
பின்னர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து வாழ்க்கையிலும் தொழிலிலும் இருவரும் சரிவை சந்தித்து வருகிறார்கள். 
 
இதனால் நயன்தாரா தனது குடும்ப ஜோசியரை அணிகினாராம். அவரோ திருமணம் செய்த நேரம் சரியில்லை நீங்கள் மீண்டும் ஒருமுறை தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டாள்  அனைத்து பிரச்னையும் நீங்கும் என்றாராம். இதனால் இந்த தம்பதி மறுமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகிறது.