நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி
நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வாக்காளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது, முதல் 3 கட்ட தேர்தலில் ஜூன் 4ம் தேதி இந்திய அரசு மாறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும்.
1 வாக்கு= முதல் முறை வேலைவாய்ப்பை பெறவுள்ள இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் ஊதிய உத்தரவாதம். 1 வாக்கு= ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உத்தரவாதம்.
எனவே, பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுவந்து, நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள். அந்த பிரச்னைகளை திசைதிருப்பமுடியாது என்பதைக் காட்டுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran