1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:48 IST)

வேளாண் சட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்: ராகுல் காந்தி ஆவேசம்

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக மூன்று புதிய வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சியின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கும் கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள் என மத்திய அரசுக்கு ஆவேசமாக அவர் கூறியுள்ளார். அவரது இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது