செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:12 IST)

கோலிக்கு ஆதரவாக பதிவிட்ட ராகுல் காந்தி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் விதமாக சிலர் பேசிவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ‘பிரியமான விராட், அவர்கள் எல்லாம் வன்மத்தால் நிறைந்தவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு யாருமே அன்பைத் தந்ததில்லை. அவர்களை மன்னிப்போம். அணியைக் காப்பாற்றுங்கள்’ எனக் கூறியுள்ளார்.