வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:10 IST)

திடீர் திருப்பம்: ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ராகுல் காந்தி தனது ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்துவிட்டு டெல்லி சென்று இருப்பதாகவும் அவர் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
காங்கிரஸ் ராகுல்காந்தி சமீபத்தில் ஒற்றுமை யாத்திரை என்ற பாதயாத்திரையை தொடங்கினார் என்பதும் தற்போது இந்த யாத்திரை கேரளாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி தேதி என உள்ளது 
 
இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பாதயாத்திரையை ஒத்திவைத்துவிட்டு டெல்லி சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் 24ஆம் தேதி முதல் ராகுல் காந்தி மீண்டும் தனது யாத்திரையை தொடர இருப்பதாக கூறப்படுகிறது.