திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (21:08 IST)

ரஃபேல் வருகைக்காக வாழ்த்துகள், ஆனால் சில கேள்விகள்: ராகுல்காந்தி டுவீட்

எதிரி நாடுகளின் ரேடாரில் சிக்காது, குறி தவறாது, எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காது போன்ற பெருமைகளை உடைய ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று இந்தியாவுக்கு வந்தது. இதனை ஒரு திருவிழா போல் இந்திய ராணுவம் கொண்டாடியது என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஃபேல் விமானத்தை வாங்கியது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு ஒரு சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார். அவர் ரஃபேல் விமானத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா என்று கூறிய ராகுல் காந்தி ரஃபேல் குறித்து மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
1) ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.525 கோடிக்கு பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்குவது ஏன்??
 
2) மொத்தம் 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவது ஏன்??
 
3) ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக திவாலான அனில் அம்பானிக்கு, ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கொடுத்தது ஏன்? 
 
ராகுல் காந்தியின் இந்த மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்