1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (11:01 IST)

மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி.. தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்;

மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட நிலையில் அவரது எம்பி பதவி பறிபோனது.
 
 இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
 
இதனை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் சிறை தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தகுதி நீக்க உத்தரவு இரத்தானது. இதனால் அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்பி ஆக மாறி உள்ளார். 
 
மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளதை அடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகியுள்ளார்.
 
Edited by Siva