திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (12:37 IST)

பனி மூட்டத்தால் தடம்புரண்ட ரயில்..

ஒடிசாவில் பனிமூட்டம் காரணமாக இரு ரயில்கள் மோதி தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மீது லோக் மானியா திலக் எக்ஸ்பிரஸ் மோதியதில், 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணியளவில் இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது.