புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (17:53 IST)

பஞ்சாபில் BMW கார் உதிரி பாக தயாரிக்கும் ஆலை: முதல்வருடன் ஒப்பந்தம்!

BMW car
உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ கார் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக  பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை சென்னையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையை அடுத்து இந்தியாவின் இரண்டாவது மாநிலமாகக் பிஎம்டபிள்யூ கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் மாநிலமாக பஞ்சாப் இடம்பெற்றுள்ளது
 
இது குறித்த ஒப்பந்தத்தில் பஞ்சாப் முதல்வர் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.