1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (20:45 IST)

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓனர் கைது!

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓனர் கைது!
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதியின் கார் பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பேருந்தில் இருந்த 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்ட நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் குறித்த விபரத்தை தற்போது போலீசார் கண்டுபிடித்துள்லனர். இந்த கார் அனந்த்நாக் மாவட்டம் பிஜிபெஹரா பகுதியை சேர்ந்த சஜிஜத்பாத் என்பவருடைய மாருதி கார் என்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓனர் கைது!
இதனையடுத்து அந்த மாருதி காரின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். காரின் உரிமையாளரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது