திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (17:12 IST)

புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்.! மாவட்ட ஆட்சியரும் அதிரடியாக மாற்றம்.!!

chief secrtary
புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த ராஜுவ் வர்மா சண்டிகருக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனும் கோவாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 
ஏற்கனவே அரசின் கோப்புகளை தலைமைச் செயலர் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது தலைமைச் செயலராக இருந்த ராஜு வர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது