தொடர்புடைய செய்திகள்
- இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்!
- ''ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு ''- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி
- தமிழில் பேசிய மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை !
- தொடர் விடுமுறை எதிரொலி.! குமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்..
- சென்னையில் அல்ஃபா கேர் மருத்துவமனை உதயம்..! திறந்து வைத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!
சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதி ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அதாவது 28.01.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
* பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திருவிக சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது
* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திருவிக சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.
Edited by Siva
