திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (19:39 IST)

புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. அதைத்தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் நாராயணாசாமி அறிவித்துள்ளார்.