இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய பப்ஜி முயற்சி! – புதிய ப்ளான் ரெடி!
இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் அனுமதி பெறுவதற்கான வேலைகளில் பப்ஜி கேம் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஆண்ட்ராய்டு மொபைல் விளையாட்டான பப்ஜி சுமார் 2 கோடிக்கும் மேலானோரால் விளையாடப்பட்டு வந்த நிலையில் சீன செயலிகளை தடை செய்யும்போது பப்ஜியும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேம் டெவலப்பர்களில் ஒன்றான டென்செண்ட் நிறுவனம் மற்றும் அதன் அதிகமான பங்குகள் சீனாவுடன் இருப்பதால் பப்ஜி சீன செயலியாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டது.
இதனால் பப்ஜி கேம் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பப்ஜி கேம் நிறுவன பங்குகளை தென் கொரியாவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க தென் கொரியா சார்ந்த கேம் நிறுவனமாக மாற்றிய பின் மீண்டும் இந்தியாவில் பப்ஜியை அனுமதிக்க இந்திய அரசிடம் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.