வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்... PUBG-க்கு பாடை கட்டிய வெறியன்ஸ்!
பப்ஜியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வளம் மேற்கொண்ட சிலர் இளைஞர்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.
சீனா – இந்தியா இடையேயான எல்லை மோதலை தொடர்ந்து இந்தியாவில் ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட பல சீன அப்ளிகேசன்கள் தடை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய இளைஞர்களை சீரழிக்கும் பப்ஜி உள்ளிட்ட கேம்களை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் பெரும்பான்மை பங்குதாரர்களாக சீனா உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் இரண்டாவது முறையாக சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் இடம்பெற்றுள்ளன. பப்ஜி தடை செய்யப்பட்டுள்ளது பப்ஜி ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பப்ஜியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்த சுவரொட்டியை வெள்ளை நிற உடையணிந்த இளைஞர்கள் தோள்களில் சுமந்துகொண்டு, ஊர்வலம் நடத்தினர். பப்ஜியின் இந்த இறுதி ஊர்வளத்தின் போது 'வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்' என்று பாடியும் சென்றனர்.